தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ டிராக்டர் கவிழ்ந்து விபத்து : போக்குவரத்து பாதிப்பு

 டிராக்டர் கவிழ்ந்து விபத்து : போக்குவரத்து பாதிப்பு

 டிராக்டர் கவிழ்ந்து விபத்து : போக்குவரத்து பாதிப்பு


ADDED : பிப் 20, 2026 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 04:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலம்: மயிலம் அடுத்த பாலப்பட்டு கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விறகுகளை ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

திண்டிவனத்திலிருந்து நேற்று விறகுகளை ஏற்றுக்கொண்டு டிராக்டர் விக்கிரவாண்டி நோக்கி சென்றது. டிராக்டரை ஆசூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 28; ஓட்டினார்.

7:00 மணியளவில் மயிலம் அடுத்த பாலப்பட்டு கிராமம் அருகே வந்தபோது, பின்னால் வேகமாக பொலிரோ ஜீப் டிராக்டர் மீது மோதியது இதில் டிராக்டர் சாலையில் கவிழ்ந்து, விறகுகள் சிதறின. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் விறகுகளை ஜே.சி.பி., உதவியுடன் அப்புறப்படுத்தினர். இதனால், 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

விபத்தில் காயமடைந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொலிரோ ஜீப் டிரைவர் தர்மபுரியைச் சேர்ந்த அரசு, 21; காயமின்றி தப்பினார்.

மயிலம் போலீசார் வழக்குப் பதிந்த விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us