ADDED : மார் 12, 2026 03:11 AM
அ நிறம் | அளவு
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த டிப்பரை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் சுந்தர் ரெட்டியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன், 45; விவசாயி. இவர், டிராக்டரின் டிப்பரை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில் அதிகாலை 4:00 மணியளவில் எழுந்துபார்த்தபோது அங்கு நிறுத்தி வைத்திருந்த டிப்பரை காணாமல் ஆனந்தன் அதிர்ச்சியடைந்தார்.
ஆனந்தன் புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.
