/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த விளக்க பிரசாரம்
/
தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த விளக்க பிரசாரம்
தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த விளக்க பிரசாரம்
தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த விளக்க பிரசாரம்
ADDED : மே 14, 2025 03:16 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில், மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம், மறியல் குறித்த விளக்க பிரசாரம் நடந்தது.
நகராட்சி திடலில் நடந்த பிரசாரத்திற்கு, தொ.மு.ச., பேரவை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் மூர்த்தி, எல்.பி.எப்., கிருஷ்ணன், ஏ.ஐ.சி.டி.யு., சவுரிராஜன், எச்.எம்.எஸ்., சிவக்குமார், மத்திய அரசை கண்டித்து நடக்கும் வேலை நிறுத்தம் குறித்து விளக்கினர்.
பிரசாரத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பை திரும்ப பெற வேண்டும்.
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தரை வார்ப்பதை நிறுத்த வேண்டும்.
பெட்ரோல், டீசல், காஸ் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.