தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில், டி.ஆர்.யு.இ.,-சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பில், தீபாவளி போனஸ் தொகையை தொழிலாளர்களுக்கு உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் ரயில்நிலையம் கோச்சிங் டெப்போ முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைமை கிளை செயலாளர் வீரராகவன் தலைமை வகித்தார்.

அமைப்பு செயலாளர் ஈஸ்வர்தாஸ், நிர்வாகிகள் பலராம், மோகன்துரை, விஜயன், சவுந்தர்ராஜன் ஆகியோர் கோரிக்கை உரையாற்றினர்.

மத்திய அரசும், ரயில்வே துறையும், கடந்த 14 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு ஒரே போனஸ் தொகையை வழங்கி வருவதை கண்டித்தும், ரயில்வேயில் உயர்ந்து வரும் வருமானத்திற்கு ஏற்ற வகையில், தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், தொழிலாளர்கள் உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கிளை செயலர் மோகன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us