/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேலை நிறுத்தம் குறித்து தொழிற்சங்கங்கள் பிரசாரம்
/
வேலை நிறுத்தம் குறித்து தொழிற்சங்கங்கள் பிரசாரம்
ADDED : மே 16, 2025 02:31 AM

செஞ்சி: வேலை நிறுத்தம் செய்ய உள்ள எதிர்க்கட்சி தொழிற்சங்கங்கள் சார்பில் பிரசாரக் கூட்டம் நடந்தது.
தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட எதிர் கட்சி தொழிற்சங்கங்கள் வரும் 20ம் தேதி மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்த உள்ளது. இந்த வேலை நிறுத்தம் குறித்த விளக்க கூட்டம் செஞ்சியில் திருவண்ணாமலை சாலையில் நேற்று நடந்தது.
தொ.மு.ச., மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் பட்டாபிராமன், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் தொ.மு.ச., லுார்து இமானுவேல், தமிழ்மணி, அரிகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி., ஜெயசுதா, சி.ஐ.டி.யு., குமார், மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.