ADDED : பிப் 18, 2026 03:07 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பைக் மீது மினி வேன் மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி இறந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த சடைக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 46; திருக்கோவிலுாரில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று மாலை 3:00 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு பைக்கில் ஊருக்கு திரும்பினார்.
திருக்கோவிலுார் - திருவண்ணாமலை சாலையில் சடைக்கட்டி, வைத்தீஸ்வரன் நகர் அருகே சென்றபோது, முன்னாள் சென்ற டாடா ஏஸ் மினி வேன், இடது புறத்தில் இருந்து திடீரென வலது புறமாக வளைந்து, பைக் மீது மோதியது. இதில் காயம் அடைந்த முருகனை திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
மணலுார்பேட்டை போலீசார் டாடா ஏஸ் வாகன டிரைவர் சடைக்கட்டி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார், 37; மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
