/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாரம்பரிய விளையாட்டு பயிற்சி அரசு பள்ளிகளில் துவக்கம்
/
பாரம்பரிய விளையாட்டு பயிற்சி அரசு பள்ளிகளில் துவக்கம்
பாரம்பரிய விளையாட்டு பயிற்சி அரசு பள்ளிகளில் துவக்கம்
பாரம்பரிய விளையாட்டு பயிற்சி அரசு பள்ளிகளில் துவக்கம்
ADDED : ஜூன் 26, 2025 02:07 AM

விழுப்புரம்: மறைந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்கும் வகையில், விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில், கல்வித்துறை அனுமதியுடன் மாணவர்களுக்கு பயிற்சி துவக்கப்பட்டுள்ளது.
குழந்தை முதல் சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர் என அனைத்து தரப்பினரும் மொபைல் போனில் மூழ்கி கிடக்கின்றனர்.இதனால், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வம் குறைந்து வருகிறது.
சிறுவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை துாண்டும் வகையில், விழுப்புரத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் தனியார் பயிற்சி மையம் சார்பில், அரசு பள்ளிகளில் ஓடி விளையாடு உடற்கல்வி பயிற்சி திட்டம் தற்போது துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், தனியார் பயிற்சி மையம் சார்பில் 3, 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மல்லர் கம்பம், ஜிம்னாஸ்டிக், சிலம்பம், யோகா, கபடி, கோ கோ, தடகள பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, பள்ளிக்கல்வித்துறை அதிகாரபூர்வமான அனுமதியை வழங்கியுள்ளது.
அதன்படி, சாமிப்பேட்டை, எம்.பிள்ளையார்குப்பம், ராமநாதபுரம், அரசமங்கலம், பில்லுார், ஆனாங்கூர், எம்.குச்சிப்பாளையம், கோலியனுார், பானாம்பட்டு, வழுதரெட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பயிற்சி அளிக்க கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
இப்பள்ளிகளில் கடந்த 23ம் தேதி முதல் மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பள்ளி வேலை நேரங்களில் ஒரு படவேளையில், மாணவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
5 இல் வளையாதது, 50ல் வளையாது என்ற பழமொழிக்கு ஏற்றவாறு, விளையாட்டு பயிற்சி பெறுவதற்கு சிறுவர்களுக்கு உடல் வளையக்கூடியதாக இருப்பதால், துவக்கப்பள்ளிகளில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது.