/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்; சீரமைக்காததால் போக்குவரத்து நெரிசல்
/
விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்; சீரமைக்காததால் போக்குவரத்து நெரிசல்
விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்; சீரமைக்காததால் போக்குவரத்து நெரிசல்
விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்; சீரமைக்காததால் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 07, 2025 12:52 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நெடுஞ்சாலை உள் வாங்கிய பகுதி சீரமைக்காததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் மகாராஜபுரம் பகுதியில், ரெட்டியார்மில் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 4ம் தேதி மாலை திடீரென சாலை உள் வாங்கியது. சுமார் 20 அடி நீளம், 6 அடி அகலத்திற்கு, தார் சாலை 5 அடி ஆழத்திற்கு உள் வாங்கியது. இதனால், உடனடியாக அந்த சாலையில் தடுப்பு அமைத்து, வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.
புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் வரும் இடதுபுற சாலையில், ஏ.டி.எம்., மையத்திற்கு அருகே இந்த சாலை பள்ளம் ஏற்பட்டதால், ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே காகுப்பம் சாலை சந்திப்பில், வாகனங்கள் ஒரே சாலையில் திருப்பி விடப்பட்டது. சாலை உள்வாங்கிய இடத்தில் சீரமைப்பு பணிகள் நடக்காததால், விழுப்புரம் - புதுச்சேரி சாலையில், ஒரே சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அந்த பகுதியில் பள்ளி, கல்லுாரிகள் இருப்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில், மாணவர்கள் மற்றும் புதுச்சேரி மார்க்க வாகனங்கள் சென்றுவர நெரிசல் நிலை ஏற்பட்டு வருகிறது.
பள்ளம் ஏற்பட்டு 3 நாட்களாகியும் நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால், மக்கள் கடும் அவதிப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அந்த பகுதியில் நெடுஞ்சாலை அழுத்தம் காரணமாக, கீழே செல்லும் 15 ஆண்டுகள் பழமையான ஆர்.சி.சி., குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
அதனை சீர்படுத்தவே, வாகனங்கள் எதிர் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இன்று (நேற்று) இரவு பள்ளம் எடுத்து, உடைந்துள்ள 300 மீட்டர் சுற்றுளவுள்ள பழைய குடிநீர் குழாய் வெட்டி அகற்றப்பட்டு, புதிய இணைப்பு குழாய் பொருத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

