தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு தேவை! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு தேவை! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு தேவை! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


ADDED : பிப் 26, 2024 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 11:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் ரயில் நிலைய சந்திப்பு அருகே தொடரும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் நகரின் மையத்தில் செல்லும் பிரதான நேருஜி சாலை, சிக்னல் சந்திப்பு முதல் ரயில் நிலையம் வரை சாலை குறுகி உள்ளதால், நீண்டகாலமாக போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. இந்த சாலை, கடலுார், புதுச்சேரி, கும்பகோணம் மார்க்க வாகனங்களும் செல்லும் முக்கிய சாலையாக உள்ளதால் அதிக வாகன போக்குவரத்தால் நெரிசல் ஏற்படுகிறது.

குறுகிய நேருஜி சாலையில், குறிப்பாக ரயில்வே பாலம் சந்திப்பு பகுதியில், உழவர் சந்தையும் உள்ளதால், தினசரி காலை, மாலை நேரங்களில் அதிக வாகனங்கள் நெரிசலில் சிக்குகின்றன. தற்போது, அந்த இடத்தில் 100 மீட்டர் தொலைவுக்கு சாலையின் மையத்தில் இரும்பு குழாய்களால் ஆன சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.

இரு மார்க்க வாகன ஓட்டிகள், குறுக்கிடாமல் செல்வதற்கு போலீசார் அமைத்துள்ள இந்த சென்டர் மீடியன் கட்டமைப்பு வரவேற்க கூடியதாக உள்ளது.

ஆனால், ஏற்கனவே மிகவும் குறுகியுள்ள அந்த பகுதியில் தற்போது, சென்டர் மீடியன் கட்டமைத்துள்ளதால், மேலும் குறுகலான நிலை ஏற்பட்டு, கடந்த 4 நாட்களாக வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர்.

விழுப்புரம் - புதுச்சேரி மார்க்க பஸ்கள், வாகனங்களும், ரயில் நிலைய பஸ் நிறுத்தத்துக்காக 5 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ்கள் வந்து நிற்பதும், ஷேர் ஆட்டோக்கள் அணிவகுப்பதாலும், போக்குவரத்து பாதிக்கிறது.

இதனால், அந்த பகுதியில் சாலையை விரிவாக்கும் விதத்தில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அங்கு ஆக்கிரமித்துள்ள டிரான்ஸ்பார்மரை அகற்றி அருகே உள்ள பகுதிக்கு மாற்றிவிட்டு, அந்த காலி இடத்தில் பஸ் பயணிகள் நின்று இறங்கி செல்ல வசதி செய்யலாம்.

அங்கு மெயின் ரோட்டிலேயே நிறுத்தப்படும் ஆட்டோக்களையும் மாற்று இடத்திற்கு அனுப்ப வேண்டும். அந்த பகுதியில் பயணிகள் நிழற்குடையும் இல்லாமல், ரயில் நிலைய பகுதி பயணிகள் நடுரோட்டில் வெயில், மழையில் காத்துள்ளனர். இதனைத் தவிர்க்க பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

நெரிசல் மிக்க அந்த பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us