/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சென்னைக்கு அணிவகுத்த வாகனங்களால் விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்
/
சென்னைக்கு அணிவகுத்த வாகனங்களால் விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்
சென்னைக்கு அணிவகுத்த வாகனங்களால் விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்
சென்னைக்கு அணிவகுத்த வாகனங்களால் விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்
ADDED : அக் 06, 2025 02:09 AM

விக்கிரவாண்டி: ஆயுதபூஜை விடுமுறை முடிந்து, சென்னைக்கு வாகனங்கள் அணிவகுத்ததால், விழுப்புரம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் ,ஆயுதபூஜை விடுமுறையையொட்டி கடந்த 29 ம் தேதி முதல் சொந்த ஊருக்கு சென்றனர். கார், பஸ், வேன் என 82 ஆயிரம் வாகனங்கள் விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி டோல்பிளாசாவை கடந்து சென்றன.
விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பதால் நேற்று முன்தினம் முதல் சென்னை நோக்கி வாகனங்கள் திரும்பின. நேற்று காலை 11:00 மணி முதல் சாலைகளில் வாகனங்கள் போக்குவரத்து அதிகரித்து அணிவகுத்து சென்றன. சாலை சந்திப்புகளில்வாகனங்கள், பாதசாரிகள் சாலையை கடக்க முடியாமல் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது .
வாகனங்கள் அதிகமாக சென்றதால் டோல் பிளாசாவில் 8 லேன்கள் (வழிகள்) திறக்கப்பட்டது. அதே நேரத்தில் திருச்சி நோக்கி வாகனங்கள் அதிகரிக்கும் நேரத்தில் வாகன போக்குவரத்திற்கு தகுந்தார்ப்போல் கூடுதலாக திருச்சி நோக்கி இரு லேன்கள் திறக்கப்பட்டு தலா 6 லேன்களில் இருபுறமும் வாகனங்கள் நெரிசலின்றி கடந்தன
நேற்று முன்தினம் விக்கிரவாண்டி டோல் பிளாசாவை 42 ஆயிரம் வாகனங்களும், நேற்று இரவு 7:30 மணி வரையில், 41 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன.
சாலைகளில் போக்குவரத்து அதிகரித்ததால் விழுப்புரம் எஸ்.பி., சரவணன் மேற்பார்வையில் விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன்,போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ் ,லோகநாதன் மற்றும் டோல் பிளாசா ஊழியர்கள் போக்குவரத்து பாதிப்பின்றி வாகனங்கள் செல்ல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.