/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேம்பாலம் கட்டுமான பணியால் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல்
/
மேம்பாலம் கட்டுமான பணியால் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல்
மேம்பாலம் கட்டுமான பணியால் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல்
மேம்பாலம் கட்டுமான பணியால் தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல்
ADDED : அக் 27, 2025 11:30 PM
அரசூர் கூட்ரோடு பகுதியில் மேம்பாலம் கட்டுமானப் பணியால் சென்னை மார்க்கமாக சென்ற வாகனங்கள் 3 கி. மீ., துாரம் அணிவகுத்ததால் அரசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வார விடுமுறை முடிந்த நிலையில் நேற்று மதியம் முதல் சென்னையை நோக்கி ஏராளமான வாகனங்கள் செல்ல துவங்கியது.
திருவெண்ணெய்நல்லுார் அருகே அரசூர் கூட்ரோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக அப்பகுதியில் சாலைகள் குறுகியதால் அப்பகுதியை வாகனங்கள் கடந்தது மெதுவாக செல்வதோடு நீண்ட வரிசையிலும் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் மாமந்துாரிலிருந்து அரசூர் கூட்ரோடு வரையில் உள்ள 3 கி.மீ., துாரம் வாகனம் ஊர்ந்து சென்றது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டி நெடுஞ்சாலைத்துறையினருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.