/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் தாக்கி 2 பேர் பலி விக்கிரவாண்டி அருகே சோகம்
/
மின்சாரம் தாக்கி 2 பேர் பலி விக்கிரவாண்டி அருகே சோகம்
மின்சாரம் தாக்கி 2 பேர் பலி விக்கிரவாண்டி அருகே சோகம்
மின்சாரம் தாக்கி 2 பேர் பலி விக்கிரவாண்டி அருகே சோகம்
ADDED : டிச 06, 2024 06:38 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வயலில் மின்சாரம் தாக்கி கல்லுாரி மாணவர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த செ.கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்ராஜ், 35; விவசாயி. இவரது உறவினர் வி.பாஞ்சாலத்தை சேர்ந்தவர் தீனதயாளன், 21; வேளச்சேரியில் வேல்டெக் யுனிவர்சிட்டியில் முதுகலை படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று மாலை 5:00 மணிக்கு சுரேஷ்ராஜ் தனது வயலில் மரத்தில் கட்டியிருந்த பசுமாட்டை அவிழ்க்க முயன்ற போது, அருகிலிருந்த மின் கம்பத்தின் ஸ்டே கம்பியை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
அப்போது உடனிருந்த தீனதயாளன், அவரை துாக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் அவரும் மயங்கி விழுந்தார்.உடன், இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர்.பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.