/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாறையை வெடி வைத்து தகர்த்தபோது தலையில் கல் விழுந்து சிறுமி பலி; விக்கிரவாண்டி அருகே சோகம்

ADDED : மார் 24, 2025 06:21 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே, பாறையை வெடி வைத்து தகர்த்த போது தலையில் கல் விழுந்து, தாய் கண்ணெதிரே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த அன்னியூர், திருக்குணம் மதுரா டி.கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஏழுமலை, 40; முத்துலட்சுமி, 35. இவர்களது மகள் காயத்ரி, 10; அதே ஊரில் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ஞாயிற்று கிழமை பள்ளி விடுமுறை என்பதால், தாய் முத்துலட்சுமியுடன் அப்பகுதி வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
டி.கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர், அப்பகுதி ஏரி அருகே, பெஞ்சல் புயலின் போது சேதமடைந்த ஓடையை வேளாண் துறை மூலம் ஜே.சி.பி., வைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். ஓடையில் பாறை இருந்ததால், அதனை அகற்ற நேற்று மாலை 5:30 மணியளவில் ஜெலட்டின் குச்சியை வெடிக்க வைத்து தகர்த்தார்.
அப்போது பாறையில் இருந்து சிதறிய கல் பறந்து வந்து, 200 மீட்டர் தொலைவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த காயத்ரி தலையில் தாக்கியது. இதில் படுகாயமடைந்த காயத்ரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே, தாய் முத்துலட்சுமி கண்ணெதிரே இறந்தார்.
தகவலறிந்த விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார், கஞ்சனுார் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
காயத்ரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்திற்கு காரணமான சங்கர் மற்றும் வெடி வைத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.