ADDED : ஜூலை 10, 2025 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், : திண்டிவனத்தில் ரயில் மறியல் செய்த விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த, 118 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் நேற்று ரயில் மறியல் பேராாட்டம் நடந்தது.
அங்கு மதியம் 12:15 மணிக்கு வந்த, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்ளிட்ட 118 பேரை, திண்டிவனம் டி.எஸ்.பி., பிரகாஷ் மற்றும் போலீசார் கைது செய்து, மயிலம் சாலை திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.