/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் நீச்சல் குளத்தில் பயிற்சி
/
விழுப்புரம் நீச்சல் குளத்தில் பயிற்சி
ADDED : மார் 29, 2025 04:43 AM
விழுப்புரம்: விழுப்புரம் விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில், நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. முதல் வகுப்பு வரும் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரையும், இரண்டாம் வகுப்பு 15 முதல் 27 வரையும், மூன்றாம் வகுப்பு 29 முதல் 11 வரையும், நான்காம் வகுப்பு மே மாதம் 13 முதல் 25ம் தேதி வரையும், ஐந்தாம் வகுப்பு 27 முதல் ஜூன் மாதம் 8 தேதிவரை என பல்வேறு பிரிவுகளாக நடக்க உள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் பயிற்சியளிக்கப்படும்.
12 நாட்கள் பயிற்சி அளித்து, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 12 நாட்களுக்கு பயிற்சி கட்டணம் 1,770 ரூபாய் ஆகும். கட்டணத்தை அங்குள்ள அலுவலகத்தில் செலுத்தலாம். பயிற்சி நேரம் ஒரு மணி நேரம் ஆகும். நீச்சல் குளம் திங்கள் கிழமை மட்டும் விடுமுறை.
இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 82707 07537, 74017 03485 என்ற மொபைல் எண்களில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.