ADDED : ஜன 16, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர்: எஸ்.ஆர்.எம் வேளாண் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வானூர் வட்டம் சேமங்கலம் ஊராட்சியில் எஸ்.ஆர்.எம். வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் உழவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் ஜவஹ லால், முனைவர்கள் ராஜசேகரன், நவீன் குமார், குழு ஒருங்கிணைப்பாளர் இலக்கியா ஆகியோர் தலைமை தாங்கினர்.
கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தில் தங்கி இருக்கும் வேளாண் கல்லூரி மாணவிகள் உழவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பிரிவின் உயர் தொழில்நுட்ப நர்சரி மற்றும் முந்திரி மதிப்பு கூட்டல் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முனைவர் பிரகாஷ், சந்திரபிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
சேமங்கலம் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

