/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி துவங்கியது!பின்பற்ற வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தல்

UPDATED : மார் 04, 2026 09:52 AM
ADDED : மார் 04, 2026 05:12 AM

விழுப்புரம்: சட்டசபை தேர்தல் விதிமுறைகள், முன்னேற்பாடுகள் குறித்து நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம், விழுப்புரத்தில் நேற்று துவங்கியது. விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மண்டல அளவிலான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் நேற்று துவங்கியது. பயிற்சிக்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகள், கள்ளக்குறிச்சி 4 சட்டசபை தொகுதிகள், கடலுார் 9 சட்டசபை தொகுதிகள், திருவண்ணாமலை 8 சட்டசபை தொகுதிகள் என நான்கு மாவட்டங்களில் உள்ள 28 தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
பயிற்சியின் போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 'சட்டசபை பொதுத் தேர்தல் 2026' ஏற்பாடுகள் குறித்து மாநில அளவிலான தேர்தல் பயிற்சியாளர்கள் கண்மணி, ராஜலட்சுமி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள், வேட்பு மனுக்கள் தாக்கலின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், வேட்பு மனு நிராகரிப்பு விதிமுறைகள் மற்றும் ஓட்டுப்பதிவின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது.
இதேபோல், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்தம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், தனி டி.ஆர்.ஓ., (நில எடுப்பு மாநில நெடுஞ்சாலைகள்) அம்பாயிரநாதன், தனி டி.ஆர்.ஓ., (நில எடுப்பு தேசிய நெடுஞ்சாலைகள்) ரவி உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர். இன்றும் பயிற்சி கூட்டம் இன்றும் நடைபெற உள்ளது.