ADDED : பிப் 09, 2024 05:53 AM

அ நிறம் | அளவு
மரக்காணம்: மரக்காணம் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் தோட்டக்கலைத் துறை மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் எஸ்.ஆர்.எம்., வேளாண் அறிவியல் கல்லுாரியில் இளங்கலை நான்காம் ஆண்டு தோட்டக்கலைத் துறை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் மரக்காணம் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் நடந்தது.
முகாமிற்கு, கல்லுாரி உதவி பேராசிரியர் முருகன் தலைமை தாங்கி, பட்டுப் புழு வளர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் தேனீ வளர்ப்பு குறித்து பேசினார். உதவி பேராசிரியர்கள் கனிமொழி, கணேஷ் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் ஏஞ்சலின் வரவேற்றார்.
மல்லிகை பூ பேக்கேஜிங் தொழில்நுட்பம், மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் கூறினர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
