/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
/
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 14, 2025 03:58 AM

விழுப்புரம் : விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், விழுப்புரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.
விழுப்புரம் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கி பயிற்சியளித்து பேசினார்.
பயிற்சியில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் பணிகளுக்கான படிவம் 6, 6A, 7, 8 ஆகியவை பயன்படுத்தும் முறுகை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், 1200 வாக்காளர்களுக்கும் அதிகமான ஓட்டுசாவடிகளை பிரிப்பது குறித்தும், ஓட்டு சாவடி கட்டட மாற்றம் மற்றும் கட்டடங்கள் சேதம் உள்ள ஓட்டுச்சாவடிகளின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது.