/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேலைவாய்ப்பு மையத்தில் எஸ்.ஐ., தேர்வுக்கான பயிற்சி
/
வேலைவாய்ப்பு மையத்தில் எஸ்.ஐ., தேர்வுக்கான பயிற்சி
வேலைவாய்ப்பு மையத்தில் எஸ்.ஐ., தேர்வுக்கான பயிற்சி
வேலைவாய்ப்பு மையத்தில் எஸ்.ஐ., தேர்வுக்கான பயிற்சி
ADDED : ஏப் 21, 2025 04:41 AM
விழுப்புரம்: விழுப்புரம் வேலை வாய்ப்பு மையத்தில், சப்இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் 1,299 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு தயாராகும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த போட்டியாளர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
விழுப்புரம் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், இன்று 21ம் தேதி காலை 10.00 மணி முதல் இதற்கான பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெற விரும்பும் நபர்கள், விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொண்டு, இலவச பயிற்சி வகுப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

