/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில ரோலர் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி

ADDED : அக் 25, 2025 06:52 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் மாநில போட்டிக்கு தேர்வாகிய வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திண்டிவனத்தில் கடந்த செப்டம்பரில், மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் விளை யாட்டு போட்டி நடந்தது.
போட்டியில், விழுப்புரம், கடலுார், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் 32 பேர் பங்கேற்றனர். போட்டியில் வென்று 22 மாணவ, மாணவிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் பெற்றனர்.
அதில், 12 பேர், மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றனர். இவர்களுக்கான போட்டி இன்று முதல்வரும் 30ம் தேதி வரை வயது வாரியான பிரிவுகளில் சென்னையில் நடக்கிறது.
மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, விழுப்புரம் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியாளர் கோபிநாத் பயிற்சி அளித்தார்.