/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பு விவசாயிகள் குழுவினருக்கு பயிற்சி
/
கரும்பு விவசாயிகள் குழுவினருக்கு பயிற்சி
ADDED : செப் 22, 2024 02:31 AM
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த எதப்பட்டு கிராமத்தில் வேளாண் துறையின் ஆத்மா திட்டத்தின் மூலம் கரும்பு விவசாயிகள் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாம்பசிவம் வரவேற்றார். கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் துரைசாமி, கரும்பு பயிரைத் தாக்கும் குருத்து துளைப்பான், இடைக்கணு துளைப்பான், வெள்ளை வேர் புழு, செதில் பூச்சி, பஞ்சு அசுவினி, மாவுப்பூச்சி போன்ற பூச்சிகளின் ஆரம்ப தாக்குதலின் அறிகுறிகள், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
துணை வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வேளாண் திட்டங்கள், தொழில் நுட்பங்களை விளக்கி பேசினார்.
பயிற்சியில், செம்மேடு கரும்பு ஆலை துணை பொது மேலாளர்கள் பிரபாகரன், ஜெயராம், கரும்பு மேலாளர் ஜோசப் செல்வகுமார், உதவி வேளாண் அலுவலர் சைலா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.