/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பவ்டாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி
/
பவ்டாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : மே 16, 2025 02:35 AM

விழுப்புரம்: விழுப்புரம் பவ்டா அலுவலகத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
விழுப்புரம் பவ்டா தலைமை அலுவலகத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒருநாள் இண்டெர்ன்ஷிப் பயிற்சி நடைபெற்றது.
சென்னை பல்கைலக்கழகம், அண்ணாமலை பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள விழுப்புரம் எம்.ஜி.ஆர்., அரசு கலை அறிவியல் கல்லுாரி, காரைக்குடி அழகப்பா பல்கலை, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பயிலும் 74 மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
பயிற்சிக்கு வந்த மாணவர்களை பவ்டா மேலாண் இயக்குனர் ஜாஸ்லின் தம்பி வரவேற்று பேசினார். தொடர்ந்து, உதவி மேலாண்மை இயக்குனர் அல்பினா ஜாஸ், பவ்டா சமூக பணிகளை கூறினார். பின், பயிற்சி குறித்த மதிப்பீட்டில், மாணவர்கள் முதுகலை சமூகவியல் படித்தல், பவ்டா பணியில் சேர்தல் குறித்தும், தங்களின் குறிக்கோளையும் எழுதி தந்தனர்.
இந்த மாணவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை பவ்டா கிளை அலுவலகங்களுக்கு சென்று இண்டெர்ன்ஷிப் பயிற்சிக்கு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி செய்தார்.