ADDED : செப் 19, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் சாலை துப்புரவு பணியாளர்களுக்கு விபத்துகளைத் தவிர்க்க பாதுகாப்பு செயல் விளக்க பயிற்சி நடந்தது.
உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் வே பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆத்துார் முதல் செங்குறிச்சி வரை 74 கி.மீ.,துாரத்தில் நான்கு வழிசாலையை பராமரித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் சாலையில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளி விபத்தில் இறந்தார். இதையடுத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு செயல் விளக்க பயிற்சி அளிக்க உத்தரவிட்டது.
அதன்பேரில், முண்டியம்பாக்கம், வழுதாவூர் கூட்ரோடு அருகே சென்னை - திருச்சி சாலை மேம்பாலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சாலை பாதுகாப்பு மேலாளர் மனோஜ் குமார் தலைமை தாங்கி செயல் விளக்க பயிற்சி அளித்தார்.