/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏ.ஆர்., கல்லுாரியில் பயிற்சி பட்டறை
/
ஏ.ஆர்., கல்லுாரியில் பயிற்சி பட்டறை
ADDED : பிப் 22, 2026 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் ஏ.ஆர்., பொறியியல் கல்லுாரியில் அறிவுசார் சொத்துரிமை குறித்த ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
நிறுவன தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் குபேரன் சிறப்புரையாற்றினார். முதல்வர் ராமதாஸ் வரவேற்றார்.
அண்ணா பல்லைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குநர் கந்தபாபு, காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தக முத்திரை உள்ளிட்ட அறிவுசார் சொத்துரிமைகளின் முக்கியத்துவம் குறித்து கூறினார். இந்த பயிற்சி பட்டறையில் மாணவர்கள்,பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

