ADDED : மார் 01, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கப்பியாம்புலியூர் ஏ.ஆர்., பொறியியல் கல்லுாரியில் அறிவுசார் சொத்துரிமை குறித்த ஒருநாள் பயிற்சி பட்டறை நடந்தது.
நிறுவன தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ராமதாஸ் வரவேற்றார். துணைத் தலைவர் குபேரன் சிறப்புரையாற்றினார். அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குநர் கந்தபாபு, காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தக முத்திரை ஆகிய அறிவுசார் சொத்துரிமைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில், மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
