/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
24 தனிப் பிரிவு போலீசார் இடமாற்றம்
/
24 தனிப் பிரிவு போலீசார் இடமாற்றம்
ADDED : செப் 28, 2024 05:14 AM
விழுப்புரம் ச விழுப்புரம் மாவட்டத்தில், 24 தனிபிரிவு போலீசாரை இடமாற்றம் செய்து, எஸ்.பி., தீபக்சிவாச் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வளவனுார் சசிக்குமார், விழுப்புரம் டவுனுக்கும், காணை ராம்குமார் விழுப்புரம் மேற்கிற்கும், கண்டமங்கலம் ராமசாமி விழுப்புரம் தாலுகாவிற்கும், கெடார் பரசுராமன் அரகண்டநல்லுாருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
மயிலம் பாலமுருகன் பெரியதச்சூருக்கும், விழுப்புரம் மேற்கு சந்தோஷ்குமார் ஆரோவிலுக்கும், திண்டிவனம் நாராயணசாமி ஒலக்கூருக்கும், ஆரோவில் சஞ்சீவி, ஆரோவில் பவுண்டேஷன் பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
விழுப்புரம் டவுன் சிவசங்கர் வளவனுாருக்கும், விழுப்புரம் தாலுகா தேவசேனா கண்டமங்கலத்துக்கும், கஞ்சனுார் போலீஸ் ஸ்டேஷன் சுரேஷ், அங்கு தனிப்பிரிவுக்கும், வெள்ளிமேடுப்பேட்டை முருகன் மயிலம் என 24 தனிப் பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.