/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்குவரத்து தொழிலாளர்கள் 22வது நாளாக போராட்டம்
/
போக்குவரத்து தொழிலாளர்கள் 22வது நாளாக போராட்டம்
ADDED : செப் 09, 2025 05:57 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் 22வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது.
விழுப்புரத்தில் அரசு போக்குவரத்து (சி.ஐ.டி.யு.,) ஊழியர் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தை கடந்த 18ம் தேதி துவங்கினர்.
தலைமை அலுவலக வாயில் முன்பு துவங்கிய போராட்டம் இரவு, பகலாக தொடர் நடத்தி வருகின்றனர். 22ம் நாளாக நேற்று நடந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலர் வேலு, மாவட்ட செயலர் மூர்த்தி, ஓய்வு பெற்றோர் சங்கம் ராமதாஸ், ராமமூர்த்தி உள் ளிட்டோர் கோரிக்கை வலி யுறுத்தி சிறப்புரையாற்றினர்.
அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பெ ன்ஷன் திட்டத்தை அமல்படுத்தவும், ஓய்வு பெறுபவர்களுக்கு தாமதமின்றி ஓய்வு கால பணப்பலன்களை வழங்க வேண்டும், தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், 30 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தினர்.