/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வெ.க., நிவாரணம் பொருட்கள் வழங்கல்
/
த.வெ.க., நிவாரணம் பொருட்கள் வழங்கல்
ADDED : டிச 07, 2024 08:07 AM

செஞ்சி: வெள்ளம் சூழ்ந்த துறிஞ்சிப்பூண்டி மனநலம் காப்பகத்திற்கு த.வெ.க., சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேல்மலையனுார் அடுத்த துறிஞ்சிப்பூண்டியில் உள்ள மனநல காப்பகத்தில் பெஞ்சல் புயலின் போது கனமழையினால் வெள்ளம் சூழ்ந்தது. இதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு 625 கிலோ அரிசி, உடைகள், மளிகை பொருட்களை காப்பக நிர்வாகிகளிடம் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு, பாஸ்கர் தலைமை தாங்கினார். செஞ்சி தொகுதி பொறுப்பாளர்கள் முரளி, தமிழரசன் முன்னிலை வகித்தனர்.
செஞ்சி நகர தலைவர், சந்திரசேகர், நகர செயலாளர் ஹரி, முன்னாள் நகர தலைவர் சரவணபிரியன், கிளை செயலாளர்கள் சரண்ராஜ், சூரியா பிரசாத், ஜனா, சூரியா உதயா, அருண்குமார் நிர்வாகிகள் பிரசாத் ஜெயகுமார், குணா, மகளிரணி சுவப்பானா கஸ்துாரி பங்கேற்றனர்.
மூங்கில்துறைப்பட்டு
அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு த.வெ.க., சார்பில் 5 கிலோ அரிசியுடன் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் பரணி பாலாஜி வழங்கினார்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் சுந்தரமூர்த்தி, சங்கராபுரம் ஒன்றிய தலைவர் குமார், நிர்வாகிகள் ஜெய்பிரகாஷ், அய்யனார், முகிலன், வின்சென்ட், ஜான்பால், அய்யாவு, சதாம், கலீல், அமருல்லா, மணிமாறன், தீபக் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.