தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


UPDATED : அக் 30, 2026 05:59 PM

ADDED : அக் 30, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 05:59 PM ADDED : அக் 30, 2026 05:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வானுார்: திருச்சிற்றம்பலம், தைலாபுரம் பகுதியில், மரக்கன்றுகள் நடப்பட்டன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு பதிலாக கிராம பகுதிகளில் நிலையான வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விஸ்கித் பாரத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வானுார் மற்றும் கிளியனுார் ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலும், தைலாபுரத்திலும் நேற்று நடந்தது.

மாவட்ட ஊராட்சி செயலர் லட்சுமி, வானுார் பி.டி.ஓ., சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்த திட்டத்தின் மூலம், இரு இடங்களிலும் மொத்தம் 240 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய பொறியாளர்கள் செல்வம், ராதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்னி, சசிகலா, ஒன்றிய மேற்பார்வையாளர் தனசேகர், தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், துணை பி.டி.ஓ., கெஜலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us