ADDED : டிச 19, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் மற்றும் அனந்தபுரம் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி அனந்தபுரம்-சிற்றரசூர் சாலையில் நடந்தது.
அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார்.
சாலை ஓரங்களில் இலுப்பை. நீர்மருது, வேப்பன், புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டனர்.இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தில்லை, ஹரி, ரவி, முகேஷ், காத்தமுத்து, செல்வம் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.