ADDED : ஜூலை 30, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த வடுகப்பூண்டி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் சுமதி, ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி கணபதி முன்னிலை வகித்தனர்.
வி.ஏ.ஓ., காளிதாஸ் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் சசிகலா மரக்கன்றுகள் நடுதலை துவக்கி வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
தலைமை ஆசிரியர் சந்தானலட்சுமி, வி.ஏ.,ஓ., அன்பழகன், ஆசிரியர் சந்தானம், மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.