/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
/
விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு
ADDED : ஜூன் 26, 2025 11:44 PM
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன், நேற்று காலை சிறப்பு ரயில் மூலம் வந்தார். பின், ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.
அப்போது, பணிகள் தரமாக மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, விபத்து அவசர கால மீட்பு ரயிலை ஆய்வு செய்தார்.
ரயில் விபத்து காலங்களில் பயணிகளை மீட்பதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா எனவும், உபகரணங்கள் பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, ரயில் நிலைய அனைத்து நடைமேடைகளிலும் பயணிகளுக்கு தேவையான சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதி மற்றும் பயணிகள் காத்திருப்பு அறை ஆகியவற்றில் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
கோட்ட முதன்மை பொறியாளர் கிளமென்ட் பர்னபாஸ், கோட்ட முதன்மை பாதுகாப்பு அதிகாரி மகேஷ்குமார், கோட்ட முதன்மை ஆப்ரேட்டிங் மேலாளர் ரமேஷ்பாபு உடனிருந்தனர்.