/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஹோலி ஏஞ்சல் பள்ளியில் முப்பெரும் விழா
/
ஹோலி ஏஞ்சல் பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : ஜூலை 19, 2025 11:58 PM

மயிலம்: மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா, காமராஜர் பிறந்த நாள், பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர் அகிலா முன்னிலை வகித்தார். ஹோலி ஏஞ்சல் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர் கீர்த்திவாசன் வரவேற்றார்.
இலக்கிய மன்ற துவக்க விழாவில் கீழ்பெண்ணாத்துார் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஓய்வு பெற்ற உதவி பேராசிரியர் சம்பத்து 'மகாபாரதத்தில் மக்களின் வேறுபாடுகள்' எனும் தலைப்பில் பேசினார்.
தொடர்ந்து ஆசிரியர் பலராமன், 'கம்பராமாயணத்தில் மானுடம் வென்றது' என்பது குறித்து விளக்க உரையாற்றினார்.
பின் காமராஜர் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, அவரது கல்விப் பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
இதையடுத்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.