ADDED : ஜன 08, 2026 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில்அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி த.வெ.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது.
கப்பியாம்புலியூர்,வடகுச்சிபாளையம்,அய்யூர் அகரம்,முண்டியம்பாக்கம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பட்டா வழங்க கோரி, சப்-வே, மேம்பாலம் அமைக்க கோரி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை செயலாளர் ரமேஷ், துணை செயலாளர்கள் காமராஜ்,கார்த்திக்,ஒன்றிய செயலாளர்கள் சேகர், மணிராஜன், பாரதி,ராமச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

