ADDED : ஜன 25, 2026 04:21 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் சுகாதார துறையை கண்டித்து வரும் 30ம் தேதி த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளதாக த.வெ.க., தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
விழுப்புரம் அடுத்த கெடார் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டியுள்ள கட்டடத்தை உடனே திறக்க வேண்டும். கெடார், காணை, கருவாட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவ சேவை வழங்கிட வேண்டும்.
தற்போது இங்கு பணியில் போதிய டாக்டர்கள் இல்லாததால், பொதுமக்கள் சரியான மருத்துவ சேவை கிடைக்காமல் பாதிக்கின்றனர்.
இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட சுகாதார துறையை கண்டித்து, தென்மேற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் வரும் 30ம் தேதி மாவட்ட சுகாதார அலுவலகம் எதிரே காலை 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் முத்து தலைமை தாங்குகிறார். ஒன்றிய செயலாளர்கள் ஜான்பீட்டர், ஸ்ரீதர், ரமேஷ், ராஜ்குமார் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட செயலாளர் வடிவேல் கண்டன உரையாற்றுகிறார். இதில், காணை ஒருங்கிணைந்த ஒன்றியங்களில் உள்ள த.வெ.க., நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

