ADDED : பிப் 01, 2026 06:09 AM

விழுப்புரம்: சுகாதார துறையை கண்டித்து விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் முத்து தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் ஜான்பீட்டர், ஸ்ரீதர், ரமேஷ், ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல், தெற்கு மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் சுகாதார துறையின் செயல்பாடுகளை கண்டித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், கெடார் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டிய கட்டடத்தை உடனே திறக்க வேண்டும். கெடார், காணை, கருவாட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவ சேவை வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் விஷக்கடிகளுக்கு போதிய மருத்துவ வசதியை செய்து தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநில வழக்கறிஞர் இணை அமைப்பாளர் குமரேசன், மாவட்ட நிர்வாகிகள் பிரித்திவிராஜ், மனோ ரஞ்சிதம், மணி, சம்பத்,சேகர், மணிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
