ADDED : பிப் 20, 2026 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை ஒன்றியத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி, த.வெ.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
த.வெ.க., காணை ஒன்றியம் சார்பில் ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ஜான்பீட்டர் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் முத்து ஸ்ரீதர், ரமேஷ் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். ெதன்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் கண்டன உரையாற்றினார்.
காணை ஒன்றியத்தில் சாலை, குடிநீர், வடிகால் ஆகிய அடிப்படை வசதிகளை விரைவாக நிறைவேற்றி தர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ், ெ பாருளாளர் விஜய் தீப், துணைச் செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்னர்.

