ADDED : மார் 13, 2026 06:37 AM

விழுப்புரம்: தமிழக அரசை கண்டித்து, விழுப்புரம் மாவட்ட த.வெ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், வடமேற்கு மாவட்ட செயலாளர் சரவணன், தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல், வடகிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் நிரஞ்சன் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக அரசின் ஊழல்களை கண்டித்தும் பேசினர்.,
இணைச் செயலாளர் காளிதாஸ், பொருளாளர் சுரேஷ், துணைச் செயலாளர் சுமன், நகர செயலாளர்கள் சேரமான் பாண்டியன், திருஞான சம்பந்தம், இளையராஜா, அணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
