ADDED : ஜூன் 09, 2026 01:06 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வி.சாத்தனுார் கிராமத்தில் த.வெ.க., சார்பில் இந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் சிறப்பிடங்களைப் பிடித்த மாணவர் களுக்கு பாராட்டு விழா நடந்தது.
தென்மேற்கு மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு முறையே 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பாரதி, மாவட்ட நிர்வாகி பிரித்விராஜ், பாலாஜி, வழக்கறிஞர் சம்பத் உட்பட நிர்வாகிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வி.சாத்தனுார் கல்வி மேம்பாட்டு குழு ரமேஷ் செய்திருந்தார்.
