/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கள்ளத்தனமாக 'சரக்கு' விற்ற த.வெ.க., நிர்வாகி சிக்கினார்
/
கள்ளத்தனமாக 'சரக்கு' விற்ற த.வெ.க., நிர்வாகி சிக்கினார்
கள்ளத்தனமாக 'சரக்கு' விற்ற த.வெ.க., நிர்வாகி சிக்கினார்
கள்ளத்தனமாக 'சரக்கு' விற்ற த.வெ.க., நிர்வாகி சிக்கினார்
ADDED : அக் 04, 2025 02:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்:தமிழகம் முழுதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், திண்டிவனம் டவுன் போலீசாருக்கு, சஞ்சீவிராயன்பேட்டையில் டாஸ்மாக் மது பாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
அப்பகுதி கம்பர் தெருவிலுள்ள த.வெ.க., திண்டிவனம் நகர நிர்வாகி மணிகண்டன், 20, என்பவர் வீட்டில் டவுன் போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் விற்பனைக்காக 62 பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.