/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வெ.க., தலைவர் பிறந்தநாள் முகையூரில் கொண்டாட்டம்
/
த.வெ.க., தலைவர் பிறந்தநாள் முகையூரில் கொண்டாட்டம்
ADDED : ஜூன் 25, 2025 01:19 AM

விழுப்புரம், : த.வெ.க., தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் விழா, முகையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் கொண்டாடப்பட்டது.
முகையூர் கிழக்கு ஒன்றியத்தில் 25 கிளைகளில், த.வெ.க., தலைவர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் ரஷித் தலைமை தாங்கி, த.வெ.க., கொடியேற்றி, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இணை செயலாளர் தண்டபானி, பொருளாளர் பாஸ்கர், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, இளங்கோவன், இலியாஸ், பாஸ்கரன், அய்யனார், சரண்ராஜ், திருமலை, மரியதாஸ், மணிகண்டன், அருண்ராஜ், ஜெய்கணேஷ், மணி, அந்தோணி வெண்ணிஸ், மகளிரணி ரபிதாபேகம், சவிதா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.