/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது லாரி மோதல்: பொக்லைன் டிரைவர் பலி
/
பைக் மீது லாரி மோதல்: பொக்லைன் டிரைவர் பலி
ADDED : ஜன 25, 2024 05:55 AM
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே லாரி மோதி பொக்லைன் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
கண்டமங்கலம் அடுத்த தி.புதுக்குப்பம் பள்ளிக்கூட குறுக்கு வீதியை சேர்ந்தவர் சக்திவேல் 52; பொக்லைன் டிரைவர். இவர் காலை 9,30 மணியளவில் தனது பைக்கில் கடை வீதிக்குச் சென்றார். சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது லாரியை முந்திச்செல்ல முயன்றுள்ளார்.
அப்போது எதிரே வந்த அதே பகுதியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் ஓட்டிவந்த பைக் , சக்திவேல் பைக் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி பைக்குடன் விழுந்த சக்திவேல் மீது லாரி ஏறியது. இதில் தலை நசுங்கி அதே இடத்தில் அவர் இறந்தார்.
தவகல் அறிந்த கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப் இன்ஸ்பெக்டர் வெள்ளத்தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.