தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஆக 31, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காசநோய் ஒழிப்புத் துறை சார்பில், விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், என்.சி.சி., மாணவர்களுக்கு, காசநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி மற்றும் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி முதல்வர் கலைமதி வரவேற்றார். காசநோய் பிரிவு மருத்துவர் நித்தியா துவக்கி வைத்து பேசுகையில், ‘காசநோய் இருப்பின் 6 மாதம் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்’ என்றார்.

காசநோய் துணை இயக்குநர் சுதாகர் பேசுகையில், ‘காசநோயை 2030ம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கு மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்திலும், காசநோய் நோயை ஒழிப்பதற்கு, கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, அக்குழுவில் தேசிய மாணவர் படையினர் இணைந்து, காசநோய் ஒழிப்பில் ஈடுபட வேண்டும்’ என்றார். ஆசிரியர் விஜயசாமூண்டீஸ்வரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us