தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி 

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி 

காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி 


ADDED : செப் 03, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்ட காசநோய் ஒழிப்புத்திட்டம் சார்பில், திண்டிவனம் அரசு கலைக் கல்லுாரியில், காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

என்.சி.சி., மாணவர்களுக்கான காசநோய் விழிப்புணர்வு பயிற்சியளிக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் (பொ) இளங்கோ தலைமை தாங்கினார். எம்.சி.சி., அலுவலர்கள் கமலக்கண்ணன், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட காசநோய் மைய மருத்துவ அலுவலர் நித்யா, மாவட்ட சுகாதார கல்வியாளர் ராஜி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.

அப்போது காசநோயின் அறிகுறிகள், அது பரவும் முறை, தடுக்கும் முறைகள், இரண்டு வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் உடனே சளி பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், அரசு வழங்கும் இலவச சிகிச்சை மற்றும் மத்திய அரசின் நிக்‌ஷய் போஷன் யோஜனா, நிக்‌ஷய் மித்ரா திட்டம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், என்.சி.சி., மாணவ, மாணவிகள், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us