/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மரக்காணம் கடற்கரையில் ஆமைக்குஞ்சு பொரிப்பகம்
/
மரக்காணம் கடற்கரையில் ஆமைக்குஞ்சு பொரிப்பகம்
ADDED : ஜன 08, 2024 05:23 AM

மரக்காணம்: மரக்காணம் கடற்கரையில் வனத்துறை சார்பில் கடல் ஆமைக்குஞ்சு பொரிப்பக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மரக்காணம் மற்றும் கோட்டக்குப்பம் பகுதியில் கடலோரம் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. ஆண்டுதோறும் கடல் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை கடலில் இருந்து கரைக்கு வருகின்றன.
கரைக்கு வரும் கடல் ஆமைகள் கடற்கரை மண்ணில் பள்ளம் தோண்டி முட்டை இட்டு விட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடுகின்றன.
வனத்துறையினர் மீனவர்களுடன் சேர்ந்து முட்டைகளை சேகரித்து தற்காலிக ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து ஆமைக்குஞ்சுகளை உற்பத்தி செய்து கடலில் விடுவார்கள்.
இந்த ஆண்டு ஆமைக்குஞ்சு பொரிப்பதற்கு வனத்துறையினர் சார்பில் குடில்கள் அமைக்காமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் முட்டையிட வந்த கடல் ஆமைகள் படகுகளில் அடிபட்டு இறந்தன.
இது குறித்து கடலோர கிராம மக்கள் முட்டையிட வரும் கடல் ஆமைகளின் இனத்தைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் மரக்காணம் அடுத்த அழகன்குப்பம் கடற்கரையில் வனத்துறையினர் பெயரளவில் கடல் ஆமைக்குஞ்சு பொரிப்பக குடில் அமைத்துள்ளனர்.
ஆனால், வனத்துறையினர் முறையாக முட்டைகளை சேகரித்து பொரிப்பகத்தில் வைப்பதில்லை. இதனால், இந்த ஆண்டு குறைந்த அளவிலான ஆமைக் குஞ்சுகளை கடலில் விடுவார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.