ADDED : ஆக 12, 2025 11:13 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி, தாலுகா அலுவலகம் முன்பு, தமிழக வெற்றி கழக தென்மேற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடந்தது.
தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்வடிவேல் தலைமை தாங்கி ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
முன்னதாக விக்கிரவாண்டி தெற்கு பைபாஸ் முனையிலிருந்து தாலுகா அலுவலகம் வரை கட்சியினர் கோஷமிட்டு ஊர்வலமாக வந்து தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதில், நந்தன் கால்வாய்த் திட்டப் பணிகளை விரைந்து முடித்து, அதை தென்பெண்ணையாற்றுடன் இணைத்தல்; எரிச்சனாம்பாளையத்தில் பம்பை வாய்க்காலில் தடுப்பணை அமைத்தல்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட இணைச்செயலர் ரமேஷ், பொருளாளர் விஜய் தீப், துணைச் செயலர்கள் காமராஜ், கார்த்திக், நகரச் செயலர் சிவா, மாவட்ட நிர்வாகிகள் பிரித்திவிராஜ், பாலாஜி, மனோரஞ்சிதம், மணி,சம்பத், ஒன்றியச் செயலர்கள் சேகர், பாரதி, முத்து, மணிராஜன், ஜான்பீட்டர், ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.