/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வெ.க., மாநாட்டு திடல்; வடக்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
/
த.வெ.க., மாநாட்டு திடல்; வடக்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
த.வெ.க., மாநாட்டு திடல்; வடக்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
த.வெ.க., மாநாட்டு திடல்; வடக்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு
ADDED : அக் 10, 2024 06:39 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநாடு நடைபெறும் இடத்தை வடக்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
நடிகர் விஜய் துவக்கி உள்ள தமிழர் வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி .சாலை என்ற இடத்தில், வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கான பணிகளை மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மாநாடு நடைபெற உள்ள இடத்தை, நேற்று மதியம் 2:00 மணி அளவில் வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அப்போது, கட்சி தலைவர் விஜய் வந்து செல்ல தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா, மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கான பாதுகாப்பு, வி.ஐ.பி.,களின் பாதுகாப்பு, தொண்டர்கள் அமர எத்தனை நாற்காலிகள் போடப்பட உள்ளது, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்.
காவல்துறை அறிவுறுத்தி உள்ள பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஐ.ஜி., கூறினார்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷாமிட்டல், எஸ்.பி., தீபக் சிவாச், ஏ.டி.எஸ்.பி., திருமால், டி.எஸ்.பி., நந்தகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.