/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேலுநாச்சியார் நினைவு தினம் த.வெ.க., அனுசரிப்பு
/
வேலுநாச்சியார் நினைவு தினம் த.வெ.க., அனுசரிப்பு
ADDED : டிச 26, 2025 05:56 AM

விழுப்புரம்: விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட த.வெ.க., சார்பில் வேலுநாச்சியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கோலியனுார் வடக்கு ஒன்றியம் அயினம்பாளையம் கிராமத்தில், தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் தலைமையில் நிர்வாகிகள் வேலுநாச்சியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோலியனுார் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ், பொருளாளர் விஜயதீப், துணைச் செயலாளர் காமராஜ் கார்த்தி, வழக்கறிஞர் அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் குமரேசன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பிரத்திவிராஜ்.
விக்கிரவாண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மணிராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் பாரதி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜில்லாராம், கோலியனுார் வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் சுசிந்திரன், பொருளாளர் விக்னேஷ்குமார், துணை செயலாளர் குமார், தொண்டரணி அமைப்பாளர் முருகவேல், மாணவரணி அமைப்பாளர் முருகாபதி, இளைஞரணி அமைப்பாளர் பாரத், செயற்குழு உறுப்பினர் அரிகரன் உட்பட மகளிரணி, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

