/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
த.வெ.க., மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடம் விக்கிரவாண்டியில் எஸ்.பி., ஆய்வு

ADDED : அக் 05, 2024 05:08 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் கட்சியின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் இடத்தில் வாகன நிறுத்துமிடத்தை எஸ்.பி., ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வரும் 27ம் தேதி நடக்கிறது.
மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த சாலையின் கிழக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான 27 ஏக்கர் இடத்தையும், மேற்கு பகுதியில் 10 ஏக்கர் நிலத்தை கட்சியினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். மாநாடு நடைபெறும் இடத்தில் நேற்று காலை பந்த்கால் நடப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணியளவில், மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த தேர்வு செய்துள்ள இடங்களை பார்வையிட்ட எஸ்.பி., தீபக் சுவாச், வாகனங்கள் நிறுத்த கூடுதல் இடம் தேவை என கட்சியினருக்கு தகவல் தெரிவிக்க அறிவுருத்தினார்.
ஆய்வின்போது, ஏ.டி.எஸ்.பி., திருமால், டி.எஸ்.பி., நந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், வசந்த் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.